< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வண்டலூர் பூங்காவுக்கு இம்மாதம் விடுமுறை இல்லை என பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!
|6 May 2023 3:42 PM IST
கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் முழுவதும் அனைத்து நாட்களும் பூங்கா திறந்து இருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை,
இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பூங்காவுக்கு இம்மாதம் முழுவதும் விடுமுறை இல்லை என பூங்கா நிர்வாகம் அறிவித்து உள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் முழுவதும் அனைத்து நாட்களும் பூங்கா திறந்து இருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.