< Back
மாநில செய்திகள்
புதுப்பெண்ணை காரில் கடத்திய பெற்றோர்
விருதுநகர்
மாநில செய்திகள்

புதுப்பெண்ணை காரில் கடத்திய பெற்றோர்

தினத்தந்தி
|
19 March 2023 12:55 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதுப்பெண்ணை காரில் கடத்திய பெற்றோரை போலீசார் கைது செய்தனர். ேமலும் அந்த பெண்ணை போலீசார் உடனடியாக மீட்டு கணவரிடம் ஒப்படைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதுப்பெண்ணை காரில் கடத்திய பெற்றோரை போலீசார் கைது செய்தனர். ேமலும் அந்த பெண்ணை போலீசார் உடனடியாக மீட்டு கணவரிடம் ஒப்படைத்தனர்.

காதல் திருமணம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 28). அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராணி(24). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். கடந்த மாதம் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் நாகராணியின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.

இந்தநிலையில் நாகராணிக்கு அவரது உறவினர் ஒருவர் போன் செய்தார். அதில் நாகராணியின் தாயார் முருகேஸ்வரிக்கு உடல் நிலை சரியில்லை, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து நாகராணி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது மேல் சிகிச்சைக்காக முருகேஸ்வரியை வேறு ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என கூறி காரில் அழைத்து சென்றனர். அவர்களுடன் நாகராணி, இவரது தந்தை சேது மற்றும் உறவினர் சென்றுள்ளனர்.

ஆனால் கார் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வேறு பாதையில் செல்வதை உணர்ந்த நாகராணி அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் நாகராணிக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. அவர் இதுகுறித்து உடனடியாக தனது கணவர் ராஜேஸ்வரனுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவித்தார்.

அவர் இதுகுறித்து நத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பெற்றோர் கைது

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராணியின் தந்தை சேது, தாயார் முருகேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர். இவர்களுடன் வந்த உறவினர் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

மேலும் கடத்தப்பட்ட பெண் நாகராணியை போலீசார் மீட்டு அவரது கணவர் ராஜேஸ்வரனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்