< Back
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலக மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெயிண்டர்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கலெக்டர் அலுவலக மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெயிண்டர்

தினத்தந்தி
|
15 July 2022 6:29 PM GMT

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கட்டிட மாடியில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கட்டிட மாடியில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிள் பறிப்பு

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த காளி என்பவரின் மகன் ராஜா என்ற தோட்டாராஜா (வயது 40). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஜோதிலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பெயிண்டர் வேலைக்கு செல்வதற்காக ராமநாதபுரம் மகா சக்தி நகர் 1-வது தெருவில் உள்ள தனது சகோதரி மகாலட்சுமி என்பவரின் வீட்டில் இருந்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆர்.எஸ்.மடை பகுதியில் மது அருந்தி உள்ளார். அப்போது நண்பர்கள் வெங்கடேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் தாங்கள் மது விற்பனை செய்வது குறித்து போலீசுக்கு ஏன் தகவல் தெரிவித்தாய் என்று கண்டித்தார்களாம். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தோட்டாராஜாவின் மோட்டார் சைக்கிளை 2 மர்ம நபர்கள் பறித்துச் சென்று விட்டார்களாம். போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் தான் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதாக கூறி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தற்கொலைக்கு முயன்றார்

இதனால் மனமுடைந்த தோட்டாராஜா நேற்று பிற்பகல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தின் மாடியில் ஏறி அவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீ வைத்து மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூச்சலிட்டார். இதனை கண்ட அப்பகுதி அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து அவரைக் கீழே இறங்கி வரும்படி கூறினர். அவர் மறுத்து தான் வாழ வழியில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறினார். போலீசார் நைசாக மேலே சென்று அவரிடம் பேசி மீட்டு கீழே கொண்டு வந்தனர். உடலில் பெட்ரோல் ஊற்றப்பட்டிருந்ததால் தண்ணீரை ஊற்றினர்.

அவரை கேணிக்கரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்