< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"வெற்றிமாறனின் கருத்துஅவரின் தனிப்பட்ட கருத்து" - மனம் திறந்த பாடலாசிரியர் சினேகன்
|13 Oct 2022 10:54 PM IST
வெற்றிமாறனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தே என பாடலாசிரியர் சினேகன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு 60 நாள் தொடர் நலத்திட்ட உதவிகளை அக்கட்சி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 50 வது நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பாடலாசிரியர் சினேகன் மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டு வழங்கினர்.
நிகழ்ச்சியே அடுத்து நமது தந்தி டிவிக்கு பேட்டி அளித்த சினேகன், நல்ல கலைஞன் எந்த பிரிவினைக்குள்ளும் அகப்பட மாட்டான் எனவும் வெற்றிமாறன் கூறிய கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தே எனவும் தெரிவித்தார்