< Back
மாநில செய்திகள்
ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டியிடம் பணம் அபேஸ்
விழுப்புரம்
மாநில செய்திகள்

ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டியிடம் பணம் அபேஸ்

தினத்தந்தி
|
24 Sept 2023 12:15 AM IST

ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டியிடம் பணம் அபேஸ் செய்யப்பட்டது.

விழுப்புரம் தக்கா தெருவை சேர்ந்தவர் பஷீர்அகமது மனைவி ரமீஜாபி (வயது 65). இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து ரூ.80 ஆயிரத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் வீட்டுக்கு வந்தார். அதன் பிறகு அந்தப் பையை பார்த்தபோது அதிலிருந்த ரூ.80 ஆயிரத்தில் ரூ.50 ஆயிரம் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தபோது கூட்ட நெரிசலில் யாரோ மர்ம நபர்கள், பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ரமீஜாபி, விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்