< Back
மாநில செய்திகள்
மகள், பேர குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மகள், பேர குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

தினத்தந்தி
|
6 Sept 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மகள், பேர குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

கச்சராபாளையம் அருகே பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவ சந்திரவீரமணி என்பவரின் மனைவி பெருமாயி(வயது 60). இவர் நேற்று முன்தினம் தனது மகள் சவுமியா(32), 13, 11 வயதுடைய பேரக்குழந்தைகளுடன் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி சென்று அவர்களின் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

விசாரணையில் பெருமாயிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இட பிரச்சனை இருந்து வருவதாகவும், அந்த இடம் சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரச்சினைக்குரிய இடத்தை அளந்து தர வருவாய்த்துறையினர் மறுத்ததால் விரக்தி அடைந்து தீக்குளிக்க முயன்றது தொியவந்தது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்