< Back
மாநில செய்திகள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

தினத்தந்தி
|
2 Oct 2023 4:30 AM IST

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அஞ்சல் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாரதீய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று பழனியில் நடைபெற்றது. இதற்கு மாநில செயலாளர் திருமலைச்சாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் அனந்தபால் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தபால் ஊழியர்களுக்கு உரிய பதவி உயர்வு வேண்டும், வங்கிகளை போல தபால் நிலையங்களுக்கும் மாதத்தின் 2 மற்றும் 4-வது சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும். போனஸ் உச்சவரம்பை நீக்க வேண்டும், தற்செயல் விடுப்பு நாட்களை 30-ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்