< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்
வேலூர்
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

தினத்தந்தி
|
25 May 2022 11:02 PM IST

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காட்பாடி

காட்பாடியை அடுத்த கோரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 64). இவர் அந்தப்பகுதியில் வீட்டில் தனியாக டி.வி பார்த்துக் கொண்டிருந்த 11 வயது சிறுமியின் வாயை பொத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது சித்தப்பாவிடம் கூறினார்.

இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா, காட்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முனுசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்