< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மோட்டார் 'சுவிட்ச்சை ஆன்' செய்தபோது மின்சாரம் தாக்கி முதியவர் பலி
|24 Jun 2022 8:00 AM IST
சென்னை வியாசர்பாடியில் மோட்டார் ‘சுவிட்ச்சை ஆன்’ செய்தபோது மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்.
சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 6-வது தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 80). இவர், வீட்டில் இருந்த மோட்டார் 'சுவிட்ச்சை ஆன்' செய்தார். அப்போது மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட துரைராஜ், ஸ்டான்லி அஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.