கள்ளக்குறிச்சி
முதியவர் மர்மசாவு
|சங்கராபுரம் அருகே முதியவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவா் குப்பன் (வயது 70) தொழிலாளி. இவருக்கு 4 மகன்கள், 1 மகள் உள்ளனர். குப்பன் தனது குடும்ப சொத்தான 1½ ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் குப்பனின் 3-வது மகன் ஆறுமுகம் என்பவர் தனது குழந்தைகள் பெயரில் 50 சென்ட் நிலத்தை குப்பனிடம் இருந்து எழுதி வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த 2-வது மகன் சின்னவன் என்பவர் தனது தந்தை குப்பனிடம் சென்று ஆறுமுகத்தின் குழந்தைகளுக்கு சொத்து எழுதி கொடுத்தது பற்றி கேட்டு்ள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சின்னவன் தனது தந்தை குப்பனை நெட்டி தள்ளிவுள்ளார். இதில் மயக்கமடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சின்னவன் தள்ளிவிட்டதில் குப்பன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.