< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கீழே கிடந்த தங்க மோதிரத்தை போலீசில் ஒப்படைத்த முதியவர்
|11 July 2023 12:47 AM IST
சேரன்மாதேவி அருகே கீழே கிடந்த தங்க மோதிரத்தை முதியவர் எடுத்து போலீசில் ஒப்படைத்தார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி கடையத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 63). ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அரிகேசவநல்லூர் சிவன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது வீதியில் கீழே கிடந்த சுமார் 10 கிராம் எடையுள்ள தங்க மோதிரத்தை கண்டெடுத்துள்ளார். இதையடுத்து நேற்று காலை அந்த மோதிரத்தை சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அப்போது அவரின் நேர்மையை சேரன்மாதேவி இன்ஸ்பெக்டர் சேக் அப்துல் காதர் பாராட்டினார்.