< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
மயங்கி கிடந்த முதியவர் சாவு
|18 Sept 2023 12:15 AM IST
கன்னியாகுமரி கடற்கரையில் மயங்கி கிடந்த முதியவர் சாவு
கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரையில் நேற்று முன்தினம் சுமார் 70 வயதுடைய முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். அவரது பெயர், ஊர் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.