< Back
மாநில செய்திகள்
குளத்தில் மூழ்கி முதியவர் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

குளத்தில் மூழ்கி முதியவர் பலி

தினத்தந்தி
|
14 Sept 2023 1:30 AM IST

திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலியானார்.

திண்டுக்கல் நாகல்நகர் குயவர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 75). நேற்று காலை இவர், வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்தநிலையில் பாரதிபுரம் அருகே உள்ள செங்குளத்தில் முதியவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மாயமான மாரிமுத்து என்று தெரியவந்தது. குளத்துக்கு சென்ற அவர், கால் தவறி உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்