< Back
மாநில செய்திகள்
மார்த்தாண்டம் அருகே டெம்போ மோதி முதியவர் சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மார்த்தாண்டம் அருகே டெம்போ மோதி முதியவர் சாவு

தினத்தந்தி
|
30 Sept 2023 9:35 PM IST

மார்த்தாண்டம் அருகே டெம்போ மோதி முதியவர் இறந்தார்.

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே பாலப்பள்ளம் படுவூர் காட்டு விளையை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 61), சைக்கிள் பழுது நீக்கும் தொழிலாளி. இவர் நேற்று பகல் மார்த்தாண்டம் அருகே நட்டாலத்தில் உள்ள புனித தேவ சகாயம் திருத்தலத்தில் உறவினர் ஒருவரின் புது நன்மை நிகழ்ச்சி நடக்க இருந்ததால், அது சம்பந்தமான ஏற்பாடுகளை கவனிக்க சென்றார்.

அப்போது அங்கு வரவேற்பு வளைவு அமைக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. அதை கிறிஸ்துதாஸ் சாலையில் நின்று பார்த்து கொண்டு இருந்தார். அப்போது வரவேற்பு வளைவுக்கான பொருட்கள் கொண்டு வந்த டெம்போ திரும்பும்போது கிறிஸ்துதாஸ் மீது மோதியது. இதனால் கீழே தூக்கி வீசப்பட்ட கிறிஸ்துதாஸ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனே அங்கு இருந்தவர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிறிஸ்துதாஸ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிறிஸ்துதாசுக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்