< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
விஷம் குடித்து முதியவர் தற்கொலை!
|18 Jun 2023 12:15 AM IST
நாமகிரிப்பேட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
ராசிபுரம்
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரை கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 85). இவர் அந்தப் பகுதியின் தி.மு.க. ஊராட்சி செயலாளராக இருந்து உள்ளார். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் கடந்த 15-ந் தேதி இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பின்னர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பெருமாள் இறந்தார். இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.