< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
ரெயில் மோதி முதியவர் சாவு
|18 Sept 2023 12:41 AM IST
தலைவாசல் அருகே ரெயில் மோதி முதியவர் இறந்தார்.
தலைவாசல்
தலைவாசல் அருகே சார்வாய் ெரயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில் நேற்று காலை 11.30 மணி அளவில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றார். அப்போது சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற ரெயில் எதிர்பாராதவிதமாக முதியவர் மீது மோதியது. இதில் தலை நசுங்கி உடல் சிதறி சம்பவ இடத்திலயே அவர் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ெரயில்வே போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆத்தூர் ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.