நாமக்கல்
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
|கந்தம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
கந்தம்பாளையம்
கந்தம்பாளையம் அருகே உள்ள மூர்த்திபட்டி மேட்டுக்காட்டைச் சேர்ந்தவர் சின்னுசாமி (வயது72). இவரது மனைவி கண்ணம்மாள். இவர்கள் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று சின்னுசாமி அவரது மேட்டுக்காட்டில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு தார்சாலையின் மெயின் ரோட்டில் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த நபர் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதில் சின்னுசாமி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னுசாமி இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை தேடி வருகின்றனர்.