விழுப்புரம்
உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்
|விழுப்புரத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செயற்பொறியாளர் தகவல்
விழுப்புரம்
விழுப்புரம் உதவி மின் பொறியாளர்(கிராமம்) கிழக்கு விழுப்புரம் மின் வாரிய அலுவலகம், விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி, 2-வது தெருவில் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்கிவந்தது. நிர்வாக காரணங்களால் இந்த உதவி பொறியாளர் கிராமம் கிழக்கு மின் வாரிய அலுவலகம் இன்று(திங்கட்கிழமை) முதல் விழுப்புரம் மகாராஜபுரம், 10-ஏ, ஜெயராமன் லேஅவுட் தெருவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. எனவே உதவி பொறியாளர் கிராமம் கிழக்கு மற்றும் விழுப்புரம் பிரிவு எல்லைக்குட்பட்ட கிராமங்களான பானாம்பட்டு, ஆனாங்கூர், பொய்யப்பாக்கம், காகுப்பம், எருமனந்தாங்கல், மாதிரிமங்கலம், சாமிபேட்டை, திருநகர், கம்பன்நகர், தேவநாதசுவாமிநகர், கோணங்கிபாளையம், எம்.குச்சிப்பாளையம், பெரியகுச்சிப்பாளையம், நன்னாட்டப்பாளையம் மற்றும் ராகவன்பேட்டை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மின்சாரம் சம்பந்தமான மற்றும் மின் கட்டண சேவைகளுக்கு தொடர்ந்து புதிய அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு மின்வாரிய செயற்பொறியாளர் சைமன் சார்லஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.