பெரம்பலூர்
முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பிய சத்துணவு ஊழியர்கள்
|முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனுவை சத்துணவு ஊழியர்கள் அனுப்பினர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரூரில் உள்ள ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஆலத்தூர் ஒன்றிய தலைவர் மாரிக்கண்ணு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பள்ளிகளில் வழங்கப்படும் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் இது தொடர்பான கோரிக்கை மனுவினை தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் வேப்பந்தட்டை, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் சத்துணவு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது.