< Back
மாநில செய்திகள்
கத்திகுத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வடமாநில வாலிபர் சாவு
வேலூர்
மாநில செய்திகள்

கத்திகுத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வடமாநில வாலிபர் சாவு

தினத்தந்தி
|
24 Aug 2022 10:17 PM IST

காட்பாடி காந்திநகர் பகுதியில் கத்திகுத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வடமாநில வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காட்பாடி காந்திநகர் பகுதியில் கத்திகுத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வடமாநில வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதைத்தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கத்திக்குத்து

காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே கடந்த 22-ந் தேதி மாலை வடமாநில வாலிபரான அபானி சரணியா (வயது 34) என்பவரை மர்மநபர் ஒருவர் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் குத்தினார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, விருதம்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த அபானி சரணியாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து வட மாநில வாலிபரை கத்தியால் குத்திய நபர் குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபானி சரணியா சிகிச்சை பலனின்றி இறந்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கை விருதம்பட்டு போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்