< Back
மாநில செய்திகள்
1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

தினத்தந்தி
|
14 Aug 2022 6:09 PM GMT

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வெளிப்பாளையம்:

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், நாகை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வருகிற 17-ந் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், வடக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் தீவிரமடைந்து கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

1-ம் எண் பயுல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது


மேலும் செய்திகள்