< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு திராவிட ஆட்சிதான் - அமைச்சர் சேகர் பாபு
மாநில செய்திகள்

'தமிழகத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு திராவிட ஆட்சிதான்' - அமைச்சர் சேகர் பாபு

தினத்தந்தி
|
17 Nov 2023 12:29 PM IST

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில், பழுதடைந்த தங்கத்தேர் சரிசெய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டு தங்கத்தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவதுபோல் பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுகிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு திராவிட ஆட்சியே நடைபெறும்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்