விருதுநகர்
புதிய தொழில் ெதாடங்கிமுன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும்
|மகளிர் சுய உதவிக்குழுக்கள் புதிய தொழில் தொடங்கி முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
அருப்புக்கோட்டை,
மகளிர் சுய உதவிக்குழுக்கள் புதிய தொழில் தொடங்கி முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
சுய உதவிக்குழுவினருக்கு சான்றிதழ்
அருப்புக்கோட்டையில் கூட்டுறவுத்துறை சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய கடன்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மண்டல பதிவாளர் செந்தில்குமார் வரவேற்றார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 201 மகளிர் குழுக்களுக்கு ரூ.3 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கடன் தள்ளுபடி சான்றிதழை வழங்கினார். மேலும் 14 சுய உதவி குழுக்களுக்கு புதிய கடன் உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழாவிற்கு அதிக அளவில் பெண்கள் வந்திருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் தான் பெண்களுக்கு இலவச பஸ் விடப்பட்டுள்ளது.
புதிய தொழில்
பெண்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரே முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். தற்போது தமிழக அரசு ஓடி, ஓடி வேலை செய்யக்கூடிய அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் கடனாக பெரும் பணத்தை கொண்டு புதிய தொழில் தொடங்கி முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஆர்.டி.ஓ. கல்யாண் குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல்கமீது, நகர்மன்ற துணை தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பதிவாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
சாத்தூர்
சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டார பகுதிகளை சேர்ந்த 163 மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள 1,603 பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா சாத்தூரில் நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார்.
இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், கோட்டாட்சியர்கள் கல்யாணகுமார், அனிதா, வட்டாட்சியர் வெங்கடேஷ், சாத்தூர் நகர் மன்ற தலைவர் குருசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கடற்கரைராஜ், முருகேசன் ம.தி.மு.க. நகர செயலாளர் கணேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.