< Back
மாநில செய்திகள்
புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை
கடலூர்
மாநில செய்திகள்

புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை

தினத்தந்தி
|
4 July 2023 12:10 AM IST

சிதம்பரம் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணை கழுத்தை அறுத்து கணவன் படுகொலை செய்தார்.

சிதம்பரம்,

மே மாதம் திருமணம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சிலம்பரசன். இவருக்கும் சீர்காழி அடுத்த அரசூரை சேர்ந்த எம்.காம் பட்டதாரியான ரோஜா(வயது 25) என்பவருக்கும் கடந்த மே மாதம் 4-ந்தேதி சிதம்பரத்தில் திருமணம் நடைபெற்றது.

சிலம்பரசன் திருமணத்துக்கு முன்பு துபாயில் 3 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கழுத்தை அறுத்துக்கொலை

இந்த நிலையில், நேற்று இரவு ரோஜா வீட்டில் இருந்தார். அப்போது, அவருக்கும் சிலம்பரசனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், பிளேடால், ரோஜாவின் கழுத்தை சிலம்பரசன் அறுத்து, துடிக்க துடிக்க கொலை செய்ததாக தெரிகிறது.

இதன் பின்னர், அவர் கிள்ளை போலீசில் நடந்த சம்பவம் குறித்து தொிவித்து சரணடைந்தார். சம்பவம் பற்றி அறிந்த கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தொடர்ந்து அவர்கள், ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

மேலும், சிலம்பரசனிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்