கிருஷ்ணகிரி
ஒற்றுமை சுடர் ஏந்தி வந்த தேசிய மாணவர்படை குழு
|என்.சி.சி. 75-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஒற்றுமை சுடர் ஏந்தி வந்ததேசிய மாணவர் படை குழுவினருக்கு கிருஷ்ணகிரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
என்.சி.சி. 75-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஒற்றுமை சுடர் ஏந்தி வந்ததேசிய மாணவர் படை குழுவினருக்கு கிருஷ்ணகிரியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒற்றுமைசுடர் ஓட்டம்
தேசிய மாணவர் படை (என்.சி.சி.) அமைப்பின் 75-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு என்.சி.சி. அதிகாரி கர்னல் கே.எஸ். பதவார் தலைமையிலான குழு கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை சுடர் ஏந்தி நாடு முழுவதும் வருகிறார்கள்.
இந்த குழுவினர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டியை வந்தடைந்தனர். அவர்களை கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் வரவேற்றார். தொடர்ந்து என்.சி.சி அதிகாரி கர்னல் கே.எஸ்.பதவார் தலைமையில் வந்த ஒற்றுமை சுடர் ஓட்டம் சப்பாணிப்பட்டியிலிருந்து, காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சுங்கச்சாவடி, குந்தாரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை வழியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியை அடைந்தது.
அங்கு நடந்த நிகழ்ச்சியில் என்.சி.சி அதிகாரி கர்னல் கே.எஸ்.பதவார் பேசியதாவது:-
தொடர் ஓட்டம்
தேசிய மாணவர் படை (என்.சி.சி) உருவாக்கப்பட்டு 75-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, இந்திய தேசத்தின் ஒற்றுமையை தேசிய மாணவர் படை மூலமாக நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டத்தின் மூலமாக ஏற்படுத்தி வருகிறோம். மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள என்.சி.சி மாணவர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 கிலோ மீட்டர் தொடர் ஓட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி கர்நாடக மாநிலத்திற்கு சென்றடைய உள்ளது. சிறப்பான வரவேற்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெட் கிராஸ் பிரதிநிதிகள்
நிகழ்ச்சியில் விமானப்படை அதிகாரி விங் கமாண்டர் எஸ்.யுவராஜ், லெப்டினல் கர்னல் சூரஜ்நாயர், நாயக்சுபேதர் விகாஸ் சர்மா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லு£ரி முதல்வர் (பொறுப்பு) சங்கீதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், மருத்துவ கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் எம்.என்.செல்வி, வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் ஜே.ஆர்.டி.ராஜன், உதவி பேராசிரியர்கள் ஹர்சாமுதீன், அனுராதா, நிர்வாக அலுவலர் சரவணன், செவிலியர் கண்காணிப்பாளர்கள் மற்றும் ரெட் கிராஸ் பிரதிநிதிகள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.