< Back
மாநில செய்திகள்
அடையாற்றில் குளிக்க சென்று மாயமான சிறுவன் சடலமாக மீட்பு
மாநில செய்திகள்

அடையாற்றில் குளிக்க சென்று மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

தினத்தந்தி
|
18 Dec 2022 1:07 PM IST

அடையாற்றில் குளிக்க சென்று மாயமான 14 வயது சிறுவன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளான்.

சென்னை,

சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் நேற்று மாயமானான். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மாணவன் இன்னும் கிடைக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் ட்ரோன் மற்றும் ரப்பர் படகு மூலம் இன்று 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தீயணைப்பு வீரர்கள் 18 மணி நேரமாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் சிறுவன் சாமுவேல் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் உடலை பிரேத பரிசோதைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்