< Back
மாநில செய்திகள்
நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
21 Jun 2023 4:15 PM IST

நாகையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


நாகையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

நாகை அபிராமி திடலில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அவைத்தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஆசைமணி முன்னிலை வகித்தார். நகர செயலாளர் தங்க.கதிரவன் வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் ஊழல் முறைகேடுகள் அதிகரித்து விட்டதால் வரும் மக்களவை தேர்தலில் தி.மு.க. அரசுக்கு புதிய பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

பதவி நீக்கம்

அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள் உள்பட கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சண்முகராசு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்