< Back
மாநில செய்திகள்
மக்களின் குரலாக மாவீரன் திரைப்படம் உள்ளது - திருமாவளவன் எம்.பி. பேட்டி
மாநில செய்திகள்

மக்களின் குரலாக மாவீரன் திரைப்படம் உள்ளது" - திருமாவளவன் எம்.பி. பேட்டி

தினத்தந்தி
|
20 July 2023 8:16 AM IST

மக்களின் குரலாக மாவீரன் திரைப்படம் உள்ளது என்று திருமாவளவன் எம்.பி. கூறினார்.

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'மாவீரன்'. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதுடன், திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திரையரங்கில் மாவீரன் திரைப்படத்தைப் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பார்த்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது:-

"மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்துள்ளார்; சில காட்சிகளில் கண்கலங்க நேர்ந்தது. மக்கள் குரலின் பிரதிபலிப்பாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' திரைப்படம் உள்ளது. சென்னை புறநகரில் குடியமர்த்தப்படும் மக்களுக்கு தரப்படும் வீடுகளின் தரம் பற்றி படம் பேசுகிறது. ஏழை எளிய மக்களின் சூழ்நிலைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் கதை அமைந்துள்ளது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்