< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது
|13 Nov 2022 12:39 AM IST
விருதுநகர் அருகே மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 36). இவர் தனது வீட்டு அருகே புதிதாக ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வாங்கிய மோட்டார் சைக்கிளை முத்துப்பாண்டி புதிய வீட்டில் நிறுத்தியிருந்தார். சம்பவத்தன்று இரவில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. அருகில் உள்ளவர்கள் தகவல் சொல்லவே அவர்களின் உதவியுடன் தீயைஅணைத்தார். இதில் மோட்டார் சைக்கிளும், புதிய வீட்டில் இருந்த சில பொருள்களும் சேதமாகிவிட்டன. இதுபற்றி முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.