< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையின் கையை முறித்த தாய்
சென்னை
மாநில செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையின் கையை முறித்த தாய்

தினத்தந்தி
|
27 Jun 2022 12:02 PM IST

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 2½ வயது பெண் குழந்தையின் கையை முறித்த தாயை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறு

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 21 வயது இளம்பெண், கணவரை பிரிந்து தனது 2½ வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் இளம்பெண் வீட்டில் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்தனர்.

அந்த நேரத்தில் வீட்டில் குழந்தை அடிக்கடி அலறியது. கள்ளக்காதலனுடன் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தை என்றும் பாராமல் இளம்பெண், கையாலும் பிரம்பாலும் அடிக்கடி குழந்தையை தாக்கியதாக தெரிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பும் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது குழந்தை அலறி இடையூறு செய்ததால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற இளம்பெண், குழந்தையை சரமாரியாக தாக்கினார். இதில் குழந்தையின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இளம்பெண் கைது

இதையடுத்து குழந்தையை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதுடன், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள், இதுபற்றி குழந்தை நல ஆர்வலர் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி குழந்தை நல ஆர்வலர் காருண்யதேவி என்பவர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தையை அடித்து துன்புறுத்தி, கையை முறிந்தது தெரிந்தது. இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்