< Back
மாநில செய்திகள்
ஆஞ்சநேயரை அசையாமல் பார்த்து நின்ற குரங்கு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ஆஞ்சநேயரை அசையாமல் பார்த்து நின்ற குரங்கு

தினத்தந்தி
|
8 March 2023 12:25 AM IST

புதுக்கோட்டையில் ஆஞ்சநேயரை அசையாமல் பார்த்து நின்ற குரங்கை பக்தர்களை வியப்புடன் பார்த்து சென்றனர்.

புதுக்கோட்டை தெற்கு 4-ம் வீதி மார்க்கெட் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் அனுமன் திருச்சபை சார்பில் தை அமாவாசை வழிபாடுகள், அனுமன் ஜெயந்தி போன்ற பல்வேறு விழாக்கள் விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நேற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயரை காண அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு குரங்கு கருவறைக்குள் சென்றது. பின்னர் ஆஞ்சநேயரை கண் அசையாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தது. மேலும், அங்கு இருந்த தேங்காய், பழம் போன்றவற்றை சாப்பிடவில்லை. அந்த குரங்கு சிறிது நேரம் ஆஞ்சநேயர் முன்பு அமர்ந்திருந்தது. அதன் பின் அங்கிருந்து வெளியே சென்றது. இந்த காட்சி பக்தர்கள் மற்றும் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்