< Back
மாநில செய்திகள்
சிறுவனை தாக்கி வீட்டில் அடைத்து வைத்த பால் வியாபாரி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சிறுவனை தாக்கி வீட்டில் அடைத்து வைத்த பால் வியாபாரி

தினத்தந்தி
|
15 Oct 2023 1:41 AM IST

பட்டுக்கோட்டை அருகே சிறுவனை தாக்கி வீட்டில் பால் வியாபாரி அடைத்து வைத்தார். இது தொடா்்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை அருகே சிறுவனை தாக்கி வீட்டில் பால் வியாபாரி அடைத்து வைத்தார். இது தொடா்்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பால் வியாபாரி

பட்டுக்கோட்டை நகர் மதுக்கூர் ரோடு சாலையில் பால் வியாபாரம் செய்து வருபவர் விவேக். இவர் பால் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் விவேக் நடத்தி வரும் பால் விற்பனை கடையில் வேலை செய்து வந்தார்.சிறுவனுக்கு பேசிய சம்பளத்தை பால் வியாபாரி விவேக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் சிறுவன் பால் கடைக்கு வேலைக்கு செல்லவில்லை.

தாக்குதல்

சம்பவத்தன்று ரோட்டில் நின்று கொண்டிருந்த றுவனை அங்கு வந்த விவேக் 'ஏன் வேலைக்கு வரவில்லை' என்று கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுவனை விவேக் இழுத்து சென்று தனது வீட்டு மாடியில் அடைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.இதை அறிந்த சிறுவனின் தாய் பால் வியாபாரி விவேக்கை சந்தித்து கேட்டார். அப்போது அவரையும் விவேக் பெல்ட்டை காட்டி மிரட்டி திட்டியதாகக் கூறப்படுகிறது.இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் விவேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விவேக் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவனை போலீசார் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் செய்திகள்