அடுத்த 24 மணி நேரத்தில் புரட்டி போடப்போகும் கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
|தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
இதில் கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
இந்நிலையில் வருகிற 26 மற்றும் 27 தேதிகளில் இலங்கை கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.