நாமக்கல்
மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி வியாபாரி பலி
|பள்ளிபாளையம் அருகே மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி வியாபாரி இறந்தார்.
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அருகே உள்ள பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 65). ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று மதியம் தனது மொபட்டில் திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அண்ணா நகர் பகுதியில் செல்லும்போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த தங்கவேலுவை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தங்கவேலு வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் சரவணன் பள்ளிபாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவரை தேடி வருகிறார்கள்.