< Back
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
விபத்தில் துணி வியாபாரி சாவு

27 Aug 2022 10:13 PM IST
பர்கூர் அருகே விபத்தில் துணி வியாபாரி இறந்தார்.
பர்கூர்
பர்கூர் அடுத்த கப்பல்வாடியை சேர்ந்தவர் முருகன் (வயது 52). துணி வியாபாரி. இவர், நேற்றுமுன் தினம் மோட்டார் சைக்கிளில் பையனூர் அருகே சென்றார். அப்போது பின்னால் வந்த வாகனம் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது. இதில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.