< Back
மாநில செய்திகள்
வீட்டில் பிணமாக கிடந்த வியாபாரி, முதியவர்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

வீட்டில் பிணமாக கிடந்த வியாபாரி, முதியவர்

தினத்தந்தி
|
16 Sept 2023 2:10 AM IST

குலசேகரம் மற்றும் தேங்காப்பட்டணம் பகுதிகளில் வீட்டில் வியாபாரி, முதியவர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குலசேகரம்:

குலசேகரம் மற்றும் தேங்காப்பட்டணம் பகுதிகளில் வீட்டில் வியாபாரி, முதியவர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வியாபாரி

குலசேகரம் அருகே உள்ள உண்ணியூர்கோணம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் ஜார்ஜ் (வயது61), வியாபாரி. இவர் நீண்ட காலம் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்த பின்பு வாகன உதிரிபாகம் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி மற்றும் மகள் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டனர். இதையடுத்து தாமஸ் ஜார்ஜ் உண்ணியூர்கோணத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் இவரது வீட்டுக்கு பால் வினியோகம் செய்ய சென்றவர், முன்தினம் வைத்து சென்ற பால் எடுக்காமல் இருப்பதை கண்டார். இதுகுறித்து அவர் அருகில் உள்ள உறவினர்களிடம் தகவல் கூறினார்.

பிணமாக கிடந்தார்

உடனே தாமஸ் ஜார்ஜின் உறவினர்கள் அவரது வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்த நிலையில் இருந்தது. அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது தாமஸ் ஜார்ஜ் கட்டிலில் இறந்த நிலையில் கிடந்தார். அவர் இறந்து 2 நாட்கள் ஆகியிருப்பது தெரிய வந்தது. இதனால் பிணம் லேசாக அழுகிய நிலையில் இருந்தது.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமஸ் ஜார்ஜின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேங்காப்பட்டணம்

இதுபோல் தேங்காப்பட்டணம் அருகே உள்ள தெருவுக்கடை, பண்டாரவிளையை சேர்ந்தவர் அகஸ்டின் (60). இவருடைய மனைவி சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றார். அதன்பின்பு அகஸ்டின் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் அகஸ்டின் நாற்காலியின் அருகே பிணமாக கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. இதனால் அவர் நாற்காலியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக தெரிகிறது.

மேலும் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்