கடலூர்
கடலூரில் 20-ந் தேதி அஞ்சல் சேவை மக்கள் குறைதீர்ப்பு மன்ற கூட்டம் அதிகாாி தகவல்
|கடலூரில் 20-ந் தேதி அஞ்சல் சேவை மக்கள் குறைதீர்ப்பு மன்ற கூட்டம் நடைபெற இருப்பதாக அதிகாாி தொிவித்துள்ளாா்.
அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு மன்றத்தின் கூட்டம் வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் கடலூர் வண்ணாரப்பாளையத்தில் உள்ள அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கடலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும். மேலும் இம்மன்றத்தின் விவாதத்துக்கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதாவது இருப்பின் அவைகளை, அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலூர் கோட்டம், கடலூர்-607 001 என்ற முகவரிக்கு வருகிற 19-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) முன்பாக கிடைக்கும்படி கடிதம் எழுதி அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட தகவல் கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.