செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து காவேரி மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் ஆலோசனை
|செந்தில் பாலாஜிக்கு எந்தெந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
சென்னை,
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட்டு இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோர்ட்டு அனுமதி அளித்தது. தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான விசாணை 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளார். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து காவேரி மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
காவேரி மருத்துவமனையின் முதன்மை செயல் இயக்குனர் அரவிந்தன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜிக்கு எந்தெந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. முன்னதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் காவேரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.