< Back
மாநில செய்திகள்
கிணற்றில் தவறிவிழுந்து மெக்கானிக் பலி
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

கிணற்றில் தவறிவிழுந்து மெக்கானிக் பலி

தினத்தந்தி
|
14 Oct 2023 12:14 AM IST

ராணிப்பேட்டை அருகே கிணற்றில் தவறிவிழுந்து மெக்கானிக் பலியானார்.

ராணிப்பேட்டையை அடுத்த செட்டித்தாங்கல் செட்டித்தாங்கல் அண்ணா தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 58), மெக்கானிக். இவர் வானாபாடி செல்லும் சாலையில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சங்கர் கிணற்றில் தவறிவிழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்