< Back
மாநில செய்திகள்
பொது மக்களிடம் மேயர் குறைகள் கேட்டார்
விருதுநகர்
மாநில செய்திகள்

பொது மக்களிடம் மேயர் குறைகள் கேட்டார்

தினத்தந்தி
|
11 March 2023 2:16 AM IST

திருத்தங்கல் பகுதியில் பொது மக்களிடம் மேயர் குறைகள் கேட்டார்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 1-வது மண்டலம், 2-வது மண்டலம் திருத்தங்கல் பகுதியில் உள்ளது. இங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மேயர் சங்கீதா இன்பம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

சிலர் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் தேவை என கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனே செய்து தர தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பேவர்பிளாக் சாலை மற்றும் தார்சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்ட மேயர், பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஆய்வின் போது துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், கவுன்சிலர்கள் நாகஜோதிலட்சுமி, அசோக்குமார், சேதுராமன், அதிகாரிகள் சாகுல்அமீது, ரமேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்