< Back
மாநில செய்திகள்
அதிகபட்சமாக சோளிங்கரில் 142.2 மில்லி மீட்டர் மழை பதிவு
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

அதிகபட்சமாக சோளிங்கரில் 142.2 மில்லி மீட்டர் மழை பதிவு

தினத்தந்தி
|
27 Aug 2022 11:26 PM IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோளிங்கரில் 142.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோளிங்கரில் 142.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பதாக சோளிங்கரில் ஒரு மணி ேநரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அதே போன்று ஆற்காடு, காவேரிப்பாக்கம், வாலாஜா உள்ளிட்ட பல்வேறு பகுகளிலும் மழை பெய்தது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக சோளிங்கரில் 142.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மற்ற இடங்களில் பெய்த மழையளவு வருமாறு:-

வாலாஜா-109.7, காவேரிப்பாக்கம்-77, ஆற்காடு-73.2, கலவை-40.2, அம்மூர்-39, அரக்கோணம்-16.6.

மேலும் செய்திகள்