< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலியை சுத்தியலால் தாக்கிய கொத்தனார் போலீசில் சரண்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கள்ளக்காதலியை சுத்தியலால் தாக்கிய கொத்தனார் போலீசில் சரண்

தினத்தந்தி
|
9 July 2022 3:05 PM IST

மறைமலைநகர் அருகே கள்ளக்காதலியை சுத்தியலால் தாக்கிய கொத்தனார் போலீசில் சரணடைந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள பேரமனூரை சேர்ந்தவர் 36 வயது பெண். இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது கணவருடன் கொத்தனார் வேலை செய்து வந்த மல்ரோஜபுரத்தை சேர்ந்த முனியசாமி (வயது 42) என்பவருடன் அந்த பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டு இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு மறைமலைநகர் கார் தொழிற்சாலையில் பணிபுரியும் வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த முனியசாமி சுத்தியலால் அந்த பெண்ணின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணை சுத்தியலால் தாக்கியதாக அவரது கள்ளக்காதலன் முனியசாமி மறைமலைநகர் போலீசில் சரணடைந்தார். இது சம்பந்தமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்