< Back
மாநில செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
5 Aug 2023 12:15 AM IST

தலைஞாயிறில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்

வாய்மேடு:

தலைஞாயிறு கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். நாகை மாவட்ட செயலாளர் மாரிமுத்து போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீர் கொடு, இல்லையென்றால் நிவாரணம் கொடு என்று கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி செயற்பொறியாளர் மதியழகன், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில், 2 நாட்களில் தலைஞாயிறு பகுதிக்கு தண்ணீர் வரப்படும் என உறுதி அளித்ததை அடுத்து உண்ணாவிராத போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்