அரியலூர்
ஆண்டிமடம் பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
|ஆண்டிமடம் பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
ஆண்டிமடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய பேரவை கூட்டம் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆண்டிமடம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் ஆண்டிமடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். விஷக்கடிகளுக்கு அனைத்து மருந்துகளும் இருப்பில் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். ஆண்டிமடம் பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் அரசு தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஆண்டிமடம் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராமப்புறங்களிலும் 100 நாள் வேலையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, ஆண்டிமடம் கடைவீதியில் பழங்குடியின, பட்டியல், அருந்ததிய மக்களின் விழுப்புரம் மாநாட்டு தீர்மானத்தை விளக்கி பிரசாரம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.