< Back
மாநில செய்திகள்
போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்றவர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்றவர் கைது

தினத்தந்தி
|
29 July 2023 9:52 PM GMT

போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

மணப்பாறை:

புகார்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 55). இவர் அங்குள்ள குடும்ப வகையறா கோவிலில் ஆரம்ப காலத்தில் இருந்து கிடா வெட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அதை அதே ஊரை சேர்ந்த ஒரு தரப்பினர் தடுத்து வருவதாகவும், கொலை மிரட்டல் விடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மணப்பாறை போலீசில் புகார் அளித்து இருந்தார்.

தீக்குளிக்க முயற்சி

இதைத்தொடர்ந்து நேற்று போலீஸ் நிலையத்திற்கு சென்ற குணசேகரன், புகாரின் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியதுடன், திடீரென போலீஸ் நிலையத்தின் உள்ளேயே தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

மேலும் அரசு பணியை செய்ய விடாமல் குணசேகரன் தடுத்ததாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்