< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
பாலங்களை வெடி வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தவர் கைது
|16 Sept 2023 2:45 AM IST
பாலங்களை வெடி வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தை நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கள்ளிமந்தையம் அருகே உள்ள கப்பல்பட்டி, பொட்டிக்காம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பாலங்களை வெடி வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த கள்ளிமந்தையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் அந்த பகுதிகளுக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண் மூலம் விசாரணை நடத்தினர். அதில் போலீசாருக்கு மிரட்டல் விடுத்தது பொட்டிக்காம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (வயது 50) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.