புல்லட் மோகம்: விலை அதிகமாக சொன்னதால் திருடி சென்ற நபர் கைது
|வேடசந்தூர் அருகே புல்லடை பேரம் பேசியதில் விலை அதிகமாக சொன்னதால் திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்து மேட்டை சேர்ந்தவர் புல்லட் ராஜா. இவரிடம் ஈரோடு மாவட்டம் தொட்டியனூரை சேர்ந்த லாரியில் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வரும் செங்கோட்டையன் கோபியிடம் புல்லட்டை விலை பேசி உள்ளார்.
இதில் புல்லட் ராஜா விலை அதிகமாக சொன்னதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்று இரவு நேரத்தில் வந்து புல்லட்டை திருடி சென்று விட்டார். இது குறித்து புல்லட் ராஜா வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விரைந்து செயல்பட்ட வேடசந்தூர் டிஎஸ்பி துர்கா தேவியின் தனிப்படை போலீசார் பாசித் ரகுமான் பாலாஜி நாகராஜ் ஆகியோர் ஈரோடு மாவட்டம் பவானியில் ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருந்த புல்லட்டை பறிமுதல் செய்தனர்.
மேலும் வாகனத்தை திருடி சென்ற கோபியை கைது செய்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.