< Back
மாநில செய்திகள்
தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது

தினத்தந்தி
|
8 Oct 2023 1:13 AM IST

வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து மது குடித்ததை மனைவியிடம் கூறியதால் தகராறு ஏற்பட்டது. இதில், தொழிலாளியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டு பத்திரம் அடமானம்

முசிறியை அடுத்த அழகாபட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 24), கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் நண்பரான புதியவன் (32) என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இந்தநிலையில் சசிகுமார் மனைவியிடம் உன் கணவர் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து மது குடிக்கிறார் என புதியவன் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சசிகுமாரின் மனைவி தனது கணவருடன் சண்டைபோட்டு தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் புதியவனுக்கும், சசிகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கத்திக்குத்து

சம்பவத்தன்று அழகப்பட்டி தொடக்கப்பள்ளி சமையல் கூடம் கட்டிடம் அருேக அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த புதியவன், காய் வெட்டும் கத்தியால் சசிகுமாரின் இடது வயிற்றில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சசிகுமார் முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில் முசிறி சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து புதியவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்