< Back
மாநில செய்திகள்
வக்கீலிடம் செல்போன் பறித்தவர் கைது
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

வக்கீலிடம் செல்போன் பறித்தவர் கைது

தினத்தந்தி
|
16 Oct 2023 2:00 AM IST

காந்திபுரத்தில் வக்கீலிடம் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் அலாவுதீன்(வயது 42). வக்கீல். இவரது உறவினர், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை பார்ப்பதற்காக அலாவுதீன் கோவை வந்தார். பின்னர் வாடகைக்கு அறை எடுக்க காந்திபுரம் காலிங்கராயன் தெருவுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி திடீரென்று அலாவுதீனின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அலாவுதீனிடம் இருந்து செல்போனை பறித்தது கள்ளக்குறிச்சி சின்ன சேலத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ்(29) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து செல்போனை மீட்டனர்.


மேலும் செய்திகள்