< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தவர் கைது
|22 Sept 2023 2:17 AM IST
மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டார்.
கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே புனல்வாசல் வடக்கு பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி (வயது 66). இவர், அரசு போக்குவரத்து கழகத்தின் ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கும், பெரிய புனவாசல் பகுதி சேர்ந்த குழந்தைவேல் மகன் சிவக்குமார் என்பவருக்கும் விவசாய தோட்டத்தில் தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சுப்பிரமணிக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள், வைக்கோலுக்கு தீ வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.